2025 மே 17, சனிக்கிழமை

துருக்கி நிலநடுக்கம்: 3500 ஐ தாண்டிய உயிரிழப்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலநடுக்கத்தில் சிக்கி துருக்கியிலும் சிரியாவின் எல்லையிலும் குறைந்தது 3,500 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மேலும் பலரைக் கண்டறிவதால், உயிரிழப்பு எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

அனர்த்த வலயத்தில் உள்ள பலர் கட்டடங்களுக்கு திரும்புவதற்கு மிகவும் அச்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிப்பதற்காக மீட்புப் பணியாளர்கள் மழை மற்றும் பனியுடன் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .