Freelancer / 2026 மார்ச் 05 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அறிவித்த 15 சதவீத உலகளாவிய இறக்குமதி வரி, இந்த வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும் என அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் 10 சதவீத வரியை விதிக்கத் திட்டமிட்டிருந்த ட்ரம்ப், பின்னர் தனது சமூக ஊடகத்தில் அதனை 15 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தார். இது வர்த்தகச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வரம்பாகும்.
ட்ரம்ப் விதித்த முந்தைய வரிகளை அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்த நிலையில், அதற்குப் பதிலடியாக இந்த புதிய வரி விதிப்பு பார்க்கப்படுகிறது.
இந்த வரிகளை சுமார் ஐந்து மாதங்களுக்கு நாடாளுமன்ற அனுமதியின்றி நடைமுறைப்படுத்த முடியும். அதன் பின்னரே காங்கிரஸின் ஒப்புதல் தேவைப்படும். (a)
15 minute ago
37 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
37 minute ago
53 minute ago