2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

நட்சத்திர விடுதியில் வெடி விபத்து; 32 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 மே 09 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நட்சத்திர விடுதியொன்றில், எரிவாயு கசிவினால் ஏற்பட்ட வெடிவிபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் கியூபாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 கியூபாவின்  தலைநகரான  ஹவானாவில் உள்ள  சரடோகா என்ற நட்சத்திர விடுதியிலே கடந்த 6 ஆம் திகதி இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

 
சுமார் 86 அறைகள் கொண்ட இவ்விடுதியில் திருத்தப்பணிகள்  இடம்பெற்றுவந்த போதே, இயற்கை எரிவாயு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு இவ்வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இவ்விபத்தினால்  குறித்த  கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும்,  திருத்தப்பணிகள் இடம்பெற்றுவந்த காரணத்தினால்  அங்கு சுற்றுலா பயணிகள் யாரும் தங்கவைக்கப்படவில்லை  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இவ் விபத்தில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 74  பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X