2025 நவம்பர் 05, புதன்கிழமை

நிதியுதவியை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு

Editorial   / 2020 ஏப்ரல் 15 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவலின் கடுமையை, அது உலகெங்கும் பரவும்முன், நிறுவனம் மூடிமறைத்துவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும் என்றும் இருப்பினும், அமெரிக்காவின் பெருந்தன்மையை நிறுவனம் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்கிறதா என்பதுகுறித்த கவலை எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனம் சீனாவிற்கு விரைவாக வல்லுநர் குழுவை அனுப்பியிருந்தால் கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்க முடியும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X