Freelancer / 2026 ஜனவரி 18 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட 8 நேட்டோ உறுப்பு நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கிரீன்லாந்தை முழுமையாகவும் முற்றாகவும் வாங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி விதிப்பு அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் முதற்கட்டமாக அனைத்துப் பொருட்களுக்கும் இந்த வரி விதிக்கப்படவுள்ளது.
ஜூன் 1 ஆம் திகதிக்கு முன்னர் ஒருவேளை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், இந்த வரி 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
டென்மார்க்கின் சுயாட்சி பிராந்தியமாகவுள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவதற்கு அமெரிக்கா நீண்டகாலமாக ஆர்வம் காட்டி வருகிறது.
எனினும், டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய உறுப்பு நாடுகள் அதற்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த நாடுகள் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் வகையில் இந்த வர்த்தக வரி விதிப்பை ட்ரம்ப் அறிவித்துள்ளார். (a)
16 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago