2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

Freelancer   / 2026 மே 03 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தை முன்னிட்டு, கொழும்பில் சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மாலைத்தீவு ஜனாதிபதி இன்று முதல் மே 6 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் அவரது தூதுக்குழுவினரின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயணத்திற்காக இந்த சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி மே 3ஆம் திகதி இன்று, ஜனாதிபதியின் வாகனத் தொடரணி கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கொழும்பை வந்தடையும்.

ஒருகொடவத்தை சந்தி, பேஸ்லைன் வீதி, பொரளை சந்தி, டி.எஸ். சேனாநாயக்க சந்தி, ஹோர்டன் பிளேஸ், தாமரைத் தடாக சுற்றுவட்டம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, நூலக சந்தி, பிளவர் வீதி சந்தி, லிபர்ட்டி சுற்றுவட்டம், சென். மைக்கெல்ஸ் வீதி, காலி வீதி, காலிமுகத்திடல் சுற்றுவட்டம் மற்றும் யோர்க் வீதி ஆகிய பகுதிகள் ஊடாக வாகனத் தொடரணி பயணிக்கவுள்ளது.

மாலைத்தீவு ஜனாதிபதி பயணம் செய்யும் வேளையில், அப்பகுதிகளில் போக்குவரத்து தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்று வழிகளுக்குத் திருப்பிவிடப்படும்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணத் தாமதங்களைத் தவிர்க்கவும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .