Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷில் உள்ள 15 இலட்சம் இந்துக்கள் அந்நாட்டில் இருந்து வெளியேற தயாராக இருக்கின்றனர் என்று ஐநா மனித உரிமை பேரவைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு மனு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பங்களாதேஷில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என இந்துக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாகவும், இந்துக்கள் மீது குறி வைத்து தாக்கப்படுவதால் அங்கிருந்து வெளியேறி அடைக்கலம் தேடி வருவதாகவும் அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஐநா உதவி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவில் சுமார் மூன்று இலட்சம் பேர் கையெழுத்துள்ளதை அடுத்து ஐநா மனித உரிமை பேரவை இந்த மனு மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது குறிப்பாக இந்துக்கள் மீதான வன்முறை தொடர்ந்து வருவதாகவும் அதற்கான சாட்சிகளை ஐநா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம் என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago