Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூலை 26 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்லாமிய ஆயுததாரிகள் எனச் சந்தேகிக்கப்படும் பிரிவினருக்கும் பங்களாதேஷ் பொலிஸாருக்குமிடையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு மோதலில், குறைந்தது 9 ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
குறித்த ஆயுததாரிகள் தங்கியிருந்த இடத்தைப் பொலிஸார் சுற்றிவளைத்தபோது, துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்தச் சண்டை, இரண்டு மணித்தியாலங்களாக நீடித்ததாகத் தெரிவித்த பொலிஸார், இதன்போதே 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர். அத்தோடு, இன்னுமோர் ஆயுததாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதோடு, அவர் கைது செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இந்த ஆயுதக்குழுவினர், டாக்காவில் உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய குழுவின் உறுப்பினர்கள் எனக் குற்றஞ்சாட்டிய பொலிஸார், மற்றொரு பாரிய தாக்குதலொன்றுக்கு அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
டாக்காவில் தாக்குதலை மேற்கொண்டது ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவே என அக்குழு உரிமை கோரியிருந்த போதிலும், அதனை பங்களாதேஷ் அரசாங்கமும் பாதுகாப்புப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, உள்;ர் ஆயுதக்குழுவே அதை மேற்கொண்டதாகத் தெரிவித்தனர். இந்த மோதலும், அந்த உள்;ர் ஆயுதக்குழுவுடனேயே இடம்பெற்றது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், பொலிஸ் அதிகாரியொருவரின் கருத்துப்படி, இதன்போது காயமடைந்த ஆயுததாரி, டாக்கா மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அவரது பெயர் ஹஸன் எனவும் அவரும் ஏனையோரும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் உறுப்பினர்கள் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
21 minute ago
28 minute ago
59 minute ago