2025 மே 09, வெள்ளிக்கிழமை

புதுடெல்லியில் கடும் நிலநடுக்கம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தில் இன்று பிற்பகல் 2.25 மணியளவில் ரிக்டர் 4.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் 2.51 மணியளவில் ரிக்டர் 6.2 அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம் டெல்லி-என்சிஆர் உட்பட வட இந்தியாவின் பல பகுதி மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் உண்டான சேத விபரங்கள் தொடர்பில் விரிவான தகவல் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் டெல்லி-என்சிஆர் குடியிருப்பாளர்கள் இரண்டாவது நிலநடுக்கத்திற்குப் பிறகு அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் இருந்து  வெளியேறும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X