Freelancer / 2026 மார்ச் 06 , பி.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல் நிலைமை காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 150 அமெரிக்க டொலர்கள் வரை உயரக்கூடும் என்றும், இதன் மூலம் புதிய எரிசக்தி நெருக்கடி உருவாகும் அபாயம் உள்ளதாகவும் கட்டார் எரிசக்தி அமைச்சர் Saad al-Kaabi எச்சரித்துள்ளார்.
யுத்த மோதல்கள் விரைவில் முடிவுக்கு வந்தாலும், அதன் தாக்கங்கள் வழமைக்குத் திரும்புவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, கட்டார் உள்ளிட்ட மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தியது.
கட்டாரில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் தளமான 'அல் உசெய்த்' (Al Udeid) விமானப்படைத் தளம் மீது இன்று ஈரானால் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், அவை முறியடிக்கப்பட்டதாக கட்டார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். R
06 Mar 2026
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2026
06 Mar 2026