Editorial / 2019 ஜூன் 14 , பி.ப. 02:41 - 1 - {{hitsCtrl.values.hits}}
பல அப்பாவி உயிர்களைப் பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகத்தை, இலங்கையின் புனித அந்தோணியார் தேவாலயத்தில் பார்த்ததாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கிர்கிஸ்தானின் தலைநகரான பிஸ்கெக் நகரில் இடம்பெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
பயங்கரவாதத்தின் ஆபத்தை தடுக்க, அனைத்து மனிதநேய சக்திகளும் ஒன்றாக முன்வரவேண்டும் என்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு, நிதி, ஊக்கம் அளிக்கும் நாட்டை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தப் போரில், அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பை அதிகப்படுத்தி, இந்த பிராந்தியத்தில், பயங்கரவாதத்தை அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிரந்தர உறுப்பினராக, இந்தியா இணைந்துள்ளது என்று கூறிய அவர், இதன் செயற்பாட்டில், இந்தியா தனது பங்களிப்பை உறுதி செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கல்வியும் கலாசாரமும், நமது சமூகத்துக்கு ஒரு நேர்மறையான செயல்பாடுகளை கொடுத்தது என்றும் இளைஞர்கள் இடையே, பிரிவினையை பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
38 minute ago
1 hours ago
1 hours ago
mfa Friday, 14 June 2019 12:22 PM
pity. he didn't see it Gujrat, he didn't see it in Ayodya
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago