2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

பார்வையால் அச்சுறுத்தும் இளைஞர்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 11 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மனிதரைப் போல தோற்றமளிக்க விரும்பாததால் பல லட்சம் செலவு செய்து தனது முகத்தை வினோதமாக மாற்றிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த இளைஞர் தனது முகத்தில் jigsaw puzzle போன்ற வடிவத்தில் பல வண்ணங்களில் பச்சை குத்தியுள்ளதோடு, காது மற்றும் மூக்குகளில் துவாரங்களிட்டு அணிகலன் அணிந்துள்ளார். 

 மேலும் தனது பற்களுகளின் இரு வரிசைகளுக்கும் டைட்டானியத்தால் ஆன மேற்பூச்சை பூசியுள்ளதோடு தனது இரு கண்களுக்கும் சாயம் பூசியுள்ளார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அவர் "உடலில் மாற்றம் செய்வதில் எனக்கு நீண்ட நாட்களாக ஆர்வம் இருந்து வந்தது.  மற்றவர்கள் உடலில் செய்யும் மாற்றத்தை போல் அல்லாமல், நான் உடல் மாற்றத்தில் தனித்துவம் காட்ட விரும்பினேன்.  முதன் முதலாக நான் எனது நாக்கை பிளவு படுத்தும் செயல்முறையுடன் மாற்றத்தை தொடங்கினேன் என்றார்.

இந்நிலையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .