2025 நவம்பர் 14, வெள்ளிக்கிழமை

பெருவில் கோர விபத்து;37 பேர் பலி; 26 பேர் மீட்பு

R.Tharaniya   / 2025 நவம்பர் 13 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரு நாடு, சிலியுடன் இணைக்கும் சுர் நெடுஞ்சாலையில் பஸ்ஸூம், சரக்கு வேனும் மோதிய விபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லாமோசாஸ் என்ற நிறுவனத்தின் பஸ் காரவேலி மாகாணத்தில் உள்ள சாலா என்ற நகரத்தில் இருந்து அரேக்விபா என்ற இடத்திற்கு சென்று கொண்டு இருந்தது. பஸ்ஸில் மொத்தம் 60 பேர் இருந்துள்ளனர். வளைவு ஒன்றில் திரும்பும் போது, எதிரே வந்த சரக்கு வேன் ஒன்றின் மீது பஸ் மோதியுள்ளது.

மோதிய வேகத்தில் பஸ்சானது 200 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்துள்ளது. சம்பவ இடத்திலேயே 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்புப் பணிகளில் இறங்கிய அவர்கள், இடிபாடுகளில் இருந்த 37 சடலங்களை மீட்டுள்ளனர்.

மேலும் படுகாயம் அடைந்த 26 பேரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X