Freelancer / 2026 மார்ச் 26 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 15 அம்ச திட்டத்தை வெளியிட்டுள்ளார். அவற்றை ஏற்க மறுத்த ஈரான், பதிலுக்கு 5 கடுமையான நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு ஈரான் மறுத்ததால், அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போர் ஆரம்பித்து 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், மேற்கு ஆசியாவுக்கு கூடுதல் ராணுவத்தை அனுப்பும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில் ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர 15 அம்ச திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாயின.
இதற்கிடையில், அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சி பாகிஸ்தானில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் இதில் மத்தியஸ்தராக ஈடுபட்டுள்ளார் என்றும் தகவல் வெளியானது. ஈரானின் ஏவுகணை மற்றும் அணு ஆயுதத் திட்டத்தை முடக்கும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. ஆனாலும், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது. ஹார்முஸ் ஜலசந்தி ஈரான் கட்டுப்பாட்டில் உள்ளதால், அங்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து குறைந்து சர்வதேச சந்தையில் அதன் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர 15 நிபந்தனைகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம்:
அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் பற்றி பேச ஒரு மாத காலத்துக்கு போர் நிறுத்தம்.
ஈரான் அணு ஆயுதத்துக்கு முடிவு கட்ட வேண்டும்.
யுரேனியம் செறிவூட்டுவதை நிறுத்த வேண்டும்.
ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இருப்பில் உள்ள யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம்(ஐ.ஏ.இ.ஏ) ஈரான் ஒப்படைக்க வேண்டும்.
ஈரானின் நடான்ஸ், இஸ்ஃபஹன் மற்றும் ஃபோர்டோ ஆகிய பகுதிகளில் உள்ள அணு ஆயுத உற்பத்தி மையங்களை மூடி, ஐஏஇஏ ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
அண்டை நாடுகளில் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும்.
ஏவுகணைகளின் எண்ணிக்கை மற்றும் இலக்கு தூரங்களுக்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும்.
எதிர்காலத்தில் தற்காப்புக்கு மட்டுமே ஏவுகணைகளைப் பயன்படுத்த வேண்டும்.
இந்த நிபந்தனைகளுக்கு ஈரான் ஒப்புக் கொண்டால், ஈரான் மீதான தடை முழுவதுமாக நீக்கப்படும், அணு மின்சக்தி தயாரிப்புக்கு தேவையான உதவி செய்யப்படும். இவ்வாறு ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார். (a)
25 minute ago
29 minute ago
40 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 minute ago
40 minute ago
50 minute ago