2025 மே 03, சனிக்கிழமை

பறவை காய்ச்சல்:அமெரிக்காவில் முதல் மரணம் பதிவு

Freelancer   / 2025 ஜனவரி 07 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் முதன்முறையாக, பறவை காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி   ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை சேர்ந்த 65 வயதான வயோதிபரே,  இவ்வாறு பறவை காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

 அதிக தொற்றும் தன்மை கொண்ட எச்5என்1 ரக வைரசின் தாக்குதலுக்கு ஆளான அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

காட்டு பறவைகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்த்தாலேயே, அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக, லூசியானா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இவர் தவிர, வேறு யாருக்கும் இந்த தொற்று ஏற்படவில்லை என, லூசியானா சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.. 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X