2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பற்றியெரிந்த சூதாட்ட விடுதி: 19 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2023 ஜனவரி 02 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கம்போடியாவில் சூதாட்ட விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

கம்போடியாவின் பாய்பட் நகரிலுள்ள சூதாட்ட விடுதியொன்றில் கடந்த 30 ஆம் திகதி நள்ளிரவு, திடீரென பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

 இதனையடுத்து , சுமார் 300 பொலிஸார் மீட்புப்பணியில் ஈடுபட்ட நிலையில், காயமடைந்த 70 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இவ்விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், பலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும்  அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X