Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 11 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலா நாட்டின் புறநகர்ப் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர்.
இந்த பஸ் நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மேலும், உயிர் பிழைத்தவர்கள் பலர் பஸ்ஸில் சிக்கிக்கொண்டதாக, அந்நாட்டின் தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான பஸ் பாலத்தில் இருந்து கவிழ்ந்து கழிவுநீரால் மாசுபட்ட ஆற்றில் விழுந்துள்ளது எனவும் 70க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பஸ் இடிபாடுகளில் இருந்து 51 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து குவாத்தமாலா ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ, மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்து, மீட்பு முயற்சிகளுக்கு உதவ நாட்டின் இராணுவம் மற்றும் பேரிடர் நிறுவனத்தை நியமித்துள்ளார்.
மேலும், "இதயத்தை உடைக்கும் செய்திகளைக் கேட்டு விழித்தெழுந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் இருக்கிறோம். அவர்களின் வலி எனது வலி," என்றும், அரேவலோ குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
8 hours ago
8 hours ago