Janu / 2026 மார்ச் 01 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே ஞாயிற்றுக்கிழமை (01) அன்று, பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எம்.டி. கான் வீதியில் (MT Khan Road) உள்ள தூதரகத்திற்கு வெளியே திரண்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், தூதரக வளாகத்திற்குள் நுழைய முற்பட்டதுடன் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வன்முறையைத் தவிர்க்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் ரேஞ்சர்ஸ் (Rangers) படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

1 hours ago
02 Mar 2026
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
02 Mar 2026
02 Mar 2026