2025 மே 17, சனிக்கிழமை

பாகிஸ்தானில் பயங்கரம்: 87 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2023 ஜனவரி 31 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பள்ளிவாசலொன்றில்  நேற்றைய தினம்(30) ‘தெரீக்-இ-தலிபான்' அமைப்பினரால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.

சம்பவ தினத்தன்று குறித்த பள்ளிவாசலுக்குள் திடீரென நுழைந்த பயங்கரவாதியொருவர்,  தனது  உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.

இதில் குறித்த பள்ளிவாசலானது முற்று முழுதாக இடிந்து தடைமட்டமாகியுள்ளது.

இந்நிலையில் இத் தாக்குதலில் 87 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சிகிச்சை பெற்றுவருபவர்களில், பலரது  நிலை கவலையளிக்கும் வகையில் இருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் உயரலாம் எனவும் அஞ்சப்படுகின்றது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .