Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 07 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் வெள்ளிக்கிழமை (06) பிரார்த்தனையின்போது பள்ளிவாசலொன்றில் குண்டு வெடிப்பில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதுடன், 169 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவல்படி தரலாய் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலின் வாயிற் கதவுகளை நெருங்கிய தற்கொலைக் குண்டுதாரியொருவர் சாதனமொன்றை வெடிக்க வைத்துள்ளார். வெடிப்புக்கு முன்னதாக துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாக சம்பவத்தை கண்ணுற்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலாளியின் பெயர், புகைப்படத்தை உள்ளடக்கிய அறிக்கையொன்றில் பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழு தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.
18 minute ago
28 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago
4 hours ago
5 hours ago