Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஒக்டோபர் 13 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நோர்வே பிரஜை ஒருவர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அர்ஃபான் கதீர் பாட்டி, தனது மூன்று பிள்ளைகளுடன் பாகிஸ்தானின் குஜராத் நகருக்கு ஜூன் மாதம் நோர்வேயில் இருந்து வந்துள்ளதாக டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் அவரது சகோதரர்களும் தாயும் நோர்வேயில் இருந்ததாக அவரது உறவினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 26ஆம் திகதி தனது 3 பிள்ளைகளை பாடசாலைக்கு விடச்சென்ற அர்ஃபான், காணாமல் போயுள்ளதாக அவரது உறவினரால் தியோனா மண்டியில் உள்ள ரெஹ்மான்னியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள ஒரு சட்ட அமுலாக்க நிறுவனத்தால் அர்ஃபான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நோர்வே ஊடகத்தை மேற்கோள் காட்டி, டான் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago