Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஒக்டோபர் 30 , பி.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் முழுவதும் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தைத் தொடர்ந்து, நாட்டின் பல மாகாணங்களில் திடீரென நோய்கள் பரவிய நிலையில், பலுசிஸ்தானின் ஆறு மாவட்டங்களில் சுமார் 2,434 மலேரியா தொற்றாளர்கள் ஒரே நாளில் பதிவாகினர்.
நசிராபாத், ஜஃபராபாத், சோபத்பூர், ஜல் மாக்சி, சிபி மற்றும் கச்சி ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான தொற்றாளர்கள் பதிவாகியதாக பலுசிஸ்தான் சுகாதாரத் திணைக்களத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் டொக்டர் வசீம் பெய்க் தெரிவித்தார்.
இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பல நீரால் பரவும் நோய்கள் மற்றும் அழிவுக்கு ஆளாகுகின்றன என்று குறிப்பிட்டதாகவும் தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.
சுகாதாரத் துறை பகிர்ந்துள்ள தரவுகளின்படி, நசீராபாத் பிரிவில் ஒரே நாளில் 2,434 மலேரியா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனதுடன், வெள்ளம் பாதித்த பகுதிகளில் 1,621 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் வெள்ளத்தின் பின்விளைவுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், பலூசிஸ்தானில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, மாகாணத்தில் தினமும் ஏராளமான வயிற்றுப்போக்கு, தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் மலேரியா தொற்றுகள் பதிவாகியுள்ளன.
பலுசிஸ்தான் மற்றும் சிந்து ஆகிய இரண்டு மாகாணங்களில் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்திய பின்னர் வைரஸ் நோய்களால் பாதிக்கப்பட்டதுடன், பல மாகாணங்களில் பாகிஸ்தானில் உள்ள மக்களுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளைத் தூண்டியது.
அரசாங்கம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிவாரண அமைப்புகளின் முயற்சிகள் இருந்தபோதிலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் பலர் உணவு மற்றும் மருந்துகளின் அவசரத் தேவையில் உள்ளனர்.
பணப்பற்றாக்குறை உள்ள நாட்டில் மில்லியன் கணக்கான உயிர்களை அழித்த இயற்கை பேரழிவு குறித்து அரசாங்கத்தின் பதிலளிப்பில் பெரும்பான்மையான பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று மாகாணங்களின் 14 மாவட்டங்களில் அனர்த்த பாதிப்பு இடம்பெற்ற 38 இடங்களில் சமூக அடிப்படையிலான ஆர்வலர்களால் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்று டான் பத்திரிகை தெரிவித்துள்ளது.
கணக்கெடுப்பின்படி, பெரும்பாலான உள்ளூராட்சிகள், அரச நிறுவனங்களின் செயல்பாட்டில் மகிழ்ச்சியடையவில்லை எனவும் வெள்ளம் காரணமாக 92 சதவீத இடங்களில் உள்ள மக்கள் தங்கள் கிராமங்களையும் சுற்றுப்புறங்களையும் விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் என்றும் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு வாரங்கள் வெள்ளத்துக்குப் பின்னர், 15 இடங்களைச் சேர்ந்த பல குடும்பங்கள் திறந்த வானத்தின் கீழ் வீதிகளில், கூடாரங்கள் இன்றி வாழ்ந்து வந்தமை கண்டறியப்பட்டது.
இந்த ஆண்டு ஜூன் முதல், கடுமையான பருவமழை பாகிஸ்தான் எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago