Ilango Bharathy / 2022 டிசெம்பர் 04 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூரில் உள்ள பாடசாலையொன்றில் அண்மையில் மாணவர்களின் பைகளில் ஆணுறை, சிகரெட் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் அனுமதியில்லாமல் பாடசாலைக்கு தொலைபேசி எடுத்துவருவதாக புகார்கள் எழுந்த நிலையில், குறித்த பாடசாலை நிர்வாகத்தினர் அண்மையில் திடீரென மாணவர்களின் பைகளை பரிசோதித்துள்ளனர்.

இதன்போது மாணவர்களின் பைகளில் இருந்து ஆணுறைகள், சிகரெட்கள், சிகரெட் லைட்டர்கள், காண்ட்ராசெப்டிவ் போன்றவற்றை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
மேலும் சில மாணவர்கள் தண்ணீர் போத்தலில் மதுபானம் கலந்து கொண்டுவந்திருந்தமையும் இதன்போது அம்பலமாகியுள்ளது.
அத்துடன் இப் பொருட்கள் அனைத்து 8,9, மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் பைகளிலிருந்தே அதிகாரிகள் கைபற்றியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் ஆசிரியர்கள் மட்டுமல்லாது மாணவர்களின் பெற்றோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறும் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago