Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஜூன் 13 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எக்ஸ் வலைதளத்தின் தலைவரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுடன் பாலியல் ரீதியான உறவு வைத்திருந்ததாக அமெரிக்காவின் பிரபல இதழ் ஒன்று பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது.
தன்னுடைய நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸில் பணிபுரியும் சில பெண் ஊழியர்களுடன் எலான் மஸ்க் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், ஒரு பெண் ஊழியரிடம் தனது குழந்தைகளைப் பெற்றுத் தருமாறு பலமுறை அவர் கேட்டுக் கொண்டதாகவும் அந்த இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் பயிற்சிக்காக வந்த பெண்களிடமும் பாலியல் உறவு வைத்திருந்தாகவும், அந்த இரு நிறுவனங்களிலும் பாலியல் ரீதியான நகைச்சுவைகள் சுலபமாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்த அதே நேரம், பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவாகவே ஊதியம் வழங்கப்பட்டது என்றும் குறித்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், அந்நிறுவனங்களில் பாலியல் நகைச்சுவைகளும் மற்றும் பிற வகையான துன்புறுத்தல்களும் பொறுத்துக்கொள்ளப்பட்டதாகவும், புகார் அளிக்கும் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என சில பெண்கள் குற்றம் சாட்டியுள்ளதாகவும் குறித்த அந்த இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், 2013ஆம் ஆண்டில் ஸ்பேஸ்எக்ஸில் இருந்து இராஜினாமா செய்த பெண் ஒருவர் "எலான் மஸ்க் தன்னிடம், உலக மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் அதிக ஐ.கியூ. உள்ள குழந்தைகள் தனக்கு வேண்டும். எனவே, தன்னுடன் உறவு வைத்துக்கொண்டு தனது குழந்தைகளைப் பெறுமாறு பலமுறை கேட்டுக் கொண்டார்" எனத் தெரிவித்ததாக அப்போது செய்திகள் வெளியாகி இருந்தன.
மேலும், ஸ்பேஸ் எக்ஸில் பணிபுரிந்த மற்றொரு பெண், எலான் மஸ்க் இரவில் தனது வீட்டிற்கு வருமாறு பலமுறை அழைப்புகள் விடுத்ததாகக் கூறி, இருவருக்கும் இடையிலான உரையாடல் பதிவுகளையும் பகிர்ந்துள்ளார். தவிர, உயர் அதிகாரிகள் உடனான சந்திப்புகளின் போது தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை எலான் மஸ்க் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.S
27 minute ago
33 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
33 minute ago
49 minute ago