2025 மே 19, திங்கட்கிழமை

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம்

Ilango Bharathy   / 2022 ஜூலை 15 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாலியல் குற்றவாளிகளுக்கு இரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கும் மசோதாவை தாய்லாந்து செனட் சபை நிறைவேற்றியுள்ளது.

இம் மசோதாவுக்கு 145 செனட் சபை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கடந்த  2013 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தாய்லாந்து சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 16,000  பாலியல் குற்றவாளிகளில் 4,848 பேர் மீண்டும் பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறுகிய சிறை காலத்திற்குப் பின்னர் மீண்டும் குற்றமிழைக்கும் நிலையில், இந்த மசோதாவின் கீழ் அவர்கள் இரசாயன ஊசிகளைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது, போலந்து, தென் கொரியா, ரஷ்யா, எஸ்டோனியா மற்றும் அமெரிக்காவின் சில மாநிலங்களில் மாத்திரமே  இரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் செய்யும் முறை சட்டப்பூர்வமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X