Editorial / 2018 ஜூன் 08 , மு.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பலத்த எதிர்ப்புகளுக்கிடையில், இந்தியாவின் இந்துத்துவ இயக்கமான ஆர்.எஸ்.எஸ் நடத்திய நிகழ்ச்சியொன்றில் நேற்று (07) பங்குபற்றினார். ஆனால் அவரது மகளின் விமர்சனத்திலிருந்து, அவர் தப்பியிருக்கவில்லை.
மதசார்பற்ற கட்சியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் காங்கிரஸைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்வது, அக்குழுவை அங்கிகரிப்பது போலாகுமென, விமர்சனங்கள் எழுந்திருந்தன.
எனினும், இவற்றுக்கு மத்தியிலும், நேற்று நடைபெற்ற நிகழ்வில், அவர் பங்குபற்றினார். அந்நிகழ்வில் பங்குபற்றுவதற்காக, நாக்பூரை நேற்றுக் காலையில் அவர் சென்றடைந்த பின்னரும் கூட, விமர்சனங்கள் தொடர்ந்திருந்தன.
முன்னராக, இறுதிநேர முயற்சியாக, அவரது மகளும் டெல்லியின் காங்கிரஸ் மகளிரணித் தலைவியுமான ஷர்மிஸ்தா முகர்ஜி, தந்தை மீதான விமர்சனங்களை, பகிரங்கமாக முன்வைத்தார்.
குறிப்பாக, இக்கூட்டத்தில் பிரணாப் பங்குபற்றுவதைக் காரணமாகக் கொண்டு, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, எதிர்வரும் தேர்தலில் ஷர்மிஸ்தா போட்டியிடப் போகிறாரெனப் பேச்சுகள் எழுந்திருந்தன.
அவற்றுக்குப் பதிலளித்த ஷர்மிஸ்தா, அதன் பின்னர், அந்த வதந்திகளைக் காரணமாகக் காட்டி, தனது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்தார்.
“இன்றைய சம்பவத்திலிருந்து, பா.ஜ.கவின் அழுக்கான தந்திரங்களை, பிரணாப் முகர்ஜி உணர்வார் என நம்புவோம். தனது கொள்கைகளை, நீங்கள் அங்கிகரிக்கப் போகிறீர்கள் என, ஆர்.எஸ்.எஸ் கூட நம்பாது. ஆனால், அந்த உரை மறுக்கப்பட்டுவிடும். ஆனால் அதன் காட்சிகள் தொடர்ந்து இருக்கும், அவை, பொய்யான கருத்துகளுடன் பகிரப்படும்.
“நாக்பூருக்குச் செல்வதன் மூலம், பொய்யான தகவல்களைப் பரப்புவதற்கு, பா.ஜ.கவுக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் நீங்கள் வாய்ப்பை வழங்குகிறீர்கள்” என்று அவர் விமர்சித்தார்.
33 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago