Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 மே 12 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல ஊடகமொன்றைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் இஸ்ரேல் நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மேற்குகரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகரைக் கைப்பற்றுவது தொடர்பில் நீண்ட காலமாக மோதல் இடம்பெற்று வருகின்றது.
கடந்த 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரில் குறித்த இரு பகுதிகளையும் இஸ்ரேல் ஆக்கிரமித்த போதும் அப் பகுதிகளில் தற்போது வரை பல லட்சம் பாலஸ்தீனர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இஸ்ரேல் இராணுவ ஆட்சிக்குபட்ட பிராந்தியத்தில் வாழும் இவர்கள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்துத் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே வேளையில் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராளிகள் பலர் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸாரைக் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் பாலஸ்தீனப் பயங்கரவாதிகளை ஒழிப்பதாகக் கூறி மேற்குகரை பகுதியில் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகளில் இஸ்ரேல் வீரர்கள் அடிக்கடி அதிரடிதேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் மேற்குகரைப் பகுதியில் ஜெனின் நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமுக்குள் நேற்றைய தினம் (11) செய்தி சேகரிக்கச் சென்ற அல்ஜசீரா செய்தி நிறுவன பத்திரிக்கையாளரான ‘ஷிரீன் அபு அக்லே ‘என்பவரின் மீது அங்கு வந்த இஸ்ரேலிய படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இத்தாக்குதலில் 51 வயதான ஷிரீன் அபு அக்லே கொல்லப்பட்டார் எனவும், அவருடன் இருந்ந அலி சமூதி என்கிற மற்றொரு பத்திரிகையாளர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த இவர் பத்திரிக்கையாளர்களுக்கான பிரத்யேக உடையை அணிந்திருந்த போதும், இஸ்ரேல் வீரர்கள் அவரை ஈவு இரக்கமின்றி சுட்டு கொன்றதாக அல்ஜசீரா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் அபு அக்லேயின் மரணம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .