2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பிரித்தானியாவின் புதிய அமைச்சரவையில் ரணிலுக்கு பதவி

Freelancer   / 2022 செப்டெம்பர் 08 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் புதிய பிரதமர் லீஸ் ட்ரஸின் அமைச்சரவையில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜெயவர்தன புதிய சுற்றுச்சூழல் செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான திணைக்களத்தை வழிநடத்தும் அதேவேளையில், உணவு மற்றும் விவசாயக் கொள்கைகளுக்குப் பொறுப்பாகவும் இவர் இருப்பார்.

முன்னதாக சர்வதேச வர்த்தகத் துறையில் கனிஸ்ட அமைச்சராக இருந்த ரணில் ஜெயவர்தன, புதிய பிரதம மந்திரி டிரஸின் ஆரம்பகால ஆதரவாளராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X