Freelancer / 2022 ஒக்டோபர் 22 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானிய பிரதமர் பொறுப்பில் இருந்து லிஸ் ட்ரஸ் பதவி விலகிய நிலையில், நாட்டின் அடுத்த பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் மீண்டும் ஆதரவை திரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இவருக்கு கடும் போட்டியாக முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் களமிறங்குவார் என்றே நம்பப்படுகிறது. தமது நெருக்கமானவாளர்களிடம், ஆதரவு திரட்ட போரிஸ் ஜோன்சன் குறுந்தகவல் அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், மீண்டும் போரிஸ் ஜோன்சனை பிரதமராக கொண்டுவருவது தற்கொலைக்கு சமம் என்றே ஒருசாரார் குறிப்பிடுகின்றனர். இதனிடையே, வெள்ளிக்கிழமையே 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ரிஷி சுனக் நெருங்கிவிட்டதாக தகவல் கசிந்துள்ள நிலையில், போரிஸ் ஜோன்சனுக்கு இன்னும் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிஷி சுனக் பிரதமராக வரவேண்டும் என இதுவரை கன்சர்வேட்டிவ் கட்சியின் 86 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். ஆனால் 54 உறுப்பினர்கள் மட்டுமே போரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மூன்றாவதாக களத்தில் இருக்கும் பென்னி என்பவருக்கு 22 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். போட்டியில் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளரும் குறைந்தபட்சம் 100 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று, திங்கட்கிழமை மதியம் உள்ளூர் நேரப்படி 2 மணிக்கு முன்னர் வாக்கெடுப்புக்கு தயாராக வேண்டும். (R)
38 minute ago
42 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
42 minute ago
46 minute ago