Editorial / 2019 ஜூலை 11 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரேபிய வளைகுடாவுக்கு அருகில், பிரித்தானிய எண்ணெய்த் தாங்கிக் கப்பலான பிரித்தானிய ஹெரிட்டேஜ்ஜை ஈரானியப் படகுகள் இடைமறிக்க முயன்று, பின்னர் தமது கடற்படைக் கப்பலான எச்.எம்.எஸ் மொன்றோஸால் துரத்தப்பட்டதாக பிரித்தானிய பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், பிரித்தானிய ஹெரிட்டேஜ்ஜுக்கு பாதுக்காப்பாகச் சென்ற எச்.எம்.எஸ் மொன்றோஸானது, பிரித்தானிய ஹெரிட்டேஜ்ஜுக்கும், மூன்று படகுகளுக்குமிடையே வலிய நகர வேண்டியேற்பட்டதாக பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளதுடன், சர்வதேச சட்டத்துக்கு முரணானதாக ஈரானின் நடவடிக்கைகள் அமைந்ததாகக் கூறியுள்ளார்.
தனது எண்ணெய்த் தாங்கிக் கப்பல் கைப்பற்றப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக எச்சரித்திருந்த ஈரான், எந்தவொரு கைப்பற்றல் முயற்சியையும் மறுத்துள்ளது.
அரேபிய வளைகுடாவைவிலிருந்து வெளியே வந்து ஹோர்முஸ் நீரிணைக்குள் செல்லும்போதே ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படைகளின் படகுகள் என நம்பப்படும் படகுகள் பிரித்தானிய ஹெரிட்டேஜ்ஜை அணுகி, அதை இடைநிறுத்த முயன்றிருந்தன.
இந்நிலையில், ஈரானியப் படகுகளை பின்நகருமாறு உத்தரவிடப்பட்டபோது, எச்.எம்.எஸ் மொன்ட்றோஸின் துப்பாக்கிகள் ஈரானியப் படகுகள் மீது இலக்கு வைத்தததாகவும், எச்சரிக்கையை ஈரானியப் படகுகள் பின்பற்றிய நிலையில் எந்தவொரு வேட்டுக்களும் தீர்க்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதேவேளை, குறித்த சம்பவமானது இடம்பெறும்போது அபு மூஸா தீவுக்கருகில் பிரித்தானிய ஹெரிட்டேஜ் இருந்ததாகக் கூறப்படுகிறது. அபு மூஸா தீவுக்கு ஈரானும், ஐக்கிய அரபு அமீரகமும் உரிமை கோருகின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், பிரித்தானிய ஹெரிட்டேஜ்ஜானது எப்போதும் சர்வதேச கடற்பரப்பிலேயே இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படைகளின் கடற்படையின் பொதுத் தொடர்பாடல்கள் அலுவலகத்தை மேற்கோள்காட்டிய ஃபார்ஸ் செய்தி முகவரகம், பிரித்தானிய ஹெரிட்டேஜ்ஜை ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படைகள் கைப்பற்ற முயன்ற அமெரிக்க தகவல் மூலங்களின் உரிமை கோரல்களை ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படைகள் நிராகரிக்கின்றது என டுவீட்டொன்றில் தெரிவித்துள்ளது.
8 minute ago
40 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
40 minute ago
52 minute ago