Freelancer / 2024 மார்ச் 13 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் கடுமையாகப்போராடும் நிலையில் அங்கு 391 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள் அதிக அளவில் மேற்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
இதன்படி இந்த ஆண்டில் இதுவரை 15 இலட்சத்து 83 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 12 ஆயிரத்து 652 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர் எனவும் அந்த நாட்டின் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி இந்த ஆண்டு இதுவரை 391 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 854 இறப்புகள் விசாரணையில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. S
21 minute ago
30 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
40 minute ago
2 hours ago