2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பிறக்காத குழந்தைக்கு அறுவை சிகிச்சை

Ilango Bharathy   / 2023 மே 15 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருப்பைக்குள் வளரும் குழந்தை ஒன்றுக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவொன்று சாதனை படைத்துள்ளது.

கருவிலிருந்த குறிப்பிட்ட குழந்தைக்கு Venus of Galen malformation என்ற சிக்கல் கண்டறியப்பட்டது. இந்தநிலை காரணமாக மூளையில் நரம்பு தொடர்பான பிரச்னை ஏற்பட்டு இதன் காரணமாகக் குழந்தை பிறந்த உடனேயே மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் வாய்ப்பு இருந்தது.

மூளையிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளம் சரியாக வளர்ச்சியடையாத போது இந்த சிக்கல் ஏற்படுகிறது. எனவே பிறக்காத குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அரிய மூளை அறுவை சிகிச்சை அமெரிக்க மருத்துவ நிபுணர்களால் சில வாரங்களுக்கு முன் செய்யப்பட்டது.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் இந்த ஆச்சரியமான அறுவை சிகிச்சை நடந்தது.

 34 வாரக் கர்ப்பிணியின் கருவிலிருந்த குழந்தைக்குச் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையில் 10 மருத்துவர்கள் ஈடுபட்டனர்.

மருத்துவர்கள் நீண்ட ஊசியை அல்ட்ராசோனோகிராபி மூலம் தாயின் வயிற்றில் செலுத்தி பின் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனர்.

தற்போது அந்த குழந்தை பிறந்து நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த குழந்தைக்கு Denver எனப் பெயரிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X