Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 11 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புடின், கடந்த 7 ஆம் திகதி தனது 70ஆவது பிறந்தநாளை மாஸ்கோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையான கிரெம்லினில் கொண்டாடினார்.
இந்நிலையில் புடினுக்கு அண்டை நாடான பெலாசரஸின் ஜனாதிபதி அலெக்ஸான்டர் லுஹான்ஸ்கோ ” தன்னாட்டில் தயாரிக்கப்பட்ட சிறப்பு ரக உழவு இயந்திரம் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார்.
புடினின் மிக நெருங்கிய நண்பராகக் கருதப்படும் லுஹான்ஸ்கோ கடந்த 1994ஆம் ஆண்டு முதல் பெலாரஸின் ஜனாதிபதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ரஷ்யாவின் மற்றுமொரு நட்பு நாடான தஜிகிஸ்தான் நாட்டு ஜனாதிபதி எமோமாலி ரஹ்மோனும் புடினுக்கு மெலான் பழங்களை மலைப்போல் அடுக்கி பரிசாக தந்துள்ளார்.
1952ஆம் ஆண்டு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர் நகரில் பிறந்த புடின் 1999ஆம் ஆண்டு தனது ஆட்சியை ரஷ்யாவில் நிறுவி, தற்போது வரை சுமார் 23 ஆண்டுகள் அந்நாட்டின் அசைக்க முடியாத தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
17 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
2 hours ago