2025 மே 19, திங்கட்கிழமை

புதிய பெயரில் இயங்கும் ‘மெக்டொனால்ட்ஸ்‘

Ilango Bharathy   / 2022 ஜூன் 14 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி உக்ரேன் மீது கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகின்றது.

இந்நிலையில் உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அண்மையில்  ரஷ்யாவை விட்டு மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் வெளியேறியது.
 
இதனையடுத்து ரஷ்யாவில் அந்நிறுவனத்தின்  தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்ட அலெக்சாண்டர் கோவர் அங்குள்ள 850 மெக்டொனால்ட்ஸ் உணவகங்களை நடத்தும்  காப்புரிமையைப்  பெற்றார்.

அத்துடன்  ‘வுகூஸ்னோ அன்ட்  டோச்கா‘ (Vkusno & Tochka)என்ற பெயரில் நேற்று முன்தினம் (12) முதல் குறித்த உணவகங்கள்  இயங்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் மாஸ்கோவில், முதல் உணவகத்தை திறந்து வைத்த கோவர், இதற்கு முன் பரிமாறப்பட்ட அதே உணவு வகைகள் இனி புதிய பெயர்களில் பரிமாறப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X