Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 ஜனவரி 15 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
புருனே நாட்டின் இளவரசர் அப்துல் மாதின், அரச வம்சாவளி அல்லாத குடும்பத்தைச் சேர்ந்த தனது காதலியை கரம்பிடித்து உலகத்தை ஈர்த்துள்ளார். உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரும், மிகப்பெரிய செல்வந்தருமான சுல்தான் ஹசனல் போல்கியாவின் 10ஆவது குழந்தைதான் இளவரசர் அப்துல் மாதின்.
இவர் பெரும்பாலும் இங்கிலாந்து இளவரசர் ஹாரியுடன் ஒப்பிடப்படுவார். காரணம் மாதினும் ஹெலிகாப்டர் பைலட்டாக புருனே விமானப்படையில் பணியாற்றி வருகிறார். பிரிட்டனின் ராயல் மிலிட்டரி அகாடமி சான்ட்ஹர்ஸ்டில் பட்டம் பெற்றவர்.
அத்துடன் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புருனே நாட்டிற்காக போலோ விளையாட்டிலும் களம் கண்டவர்தான் இளவரசர் அப்துல் மாதின்.
இந்த நிலையில், 32 வயதான இளவரசர் அப்துல் மாதின் 29 வயதான தனது காதலி யாங் முலியா அனிஷா ரோஸ்னாவை கரம்பிடித்துள்ளார்.
சுல்தானின் சிறப்பு ஆலோசகரின் பேத்தி அனிஷாரோஸ்னா என்பது குறிப்பிடத்தக்கது. பந்தர் செரி பெகவானில் உள்ள தங்க குவிமாடம் கொண்ட மசூதியில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணவிழா ஜனவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகி ஜனவரி 16 ஆம் திகதி முடிவடைகிறது.
இந்த திருமணம் சுமார் ஆயிரத்து 788 அறைகள் கொண்ட அரண்மனையில் கடந்த நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago