Editorial / 2019 ஜூன் 18 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட ஜம்மு காஷ்மிரின் அனந்தநாக்கில் இன்று (18) இடம்பெற்ற ஆயுததாரிகளுடனான துப்பாக்கி மோதலொன்றில், புல்வாமாமில் துணைப்படைப் பொலிஸார் மீதான இவ்வாண்டு பெப்ரவரியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் வெடிமருந்துகள் நிரம்பிய வாகனத்தை ஒழுங்குபடுத்திய சஜ்ஜாட் மக்பூல் பட், தற்கொலைக் குண்டுதாரியின் கையாளர் தெளசீஃப் பட் ஆகிய ஆயயுததாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சண்டையில் இராணுவப் படைவீரரொருவரும் கொல்லப்பட்டுள்ள நிலையில், அனந்தநாக் பகுதியிலுள்ள கட்டடமொன்றில் மேலுமொரு ஆயுததாரி இன்னும் ஒழிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், குறித்த மூன்று ஆயுததாரிகளும் இந்தியாவால் வேண்டப்படுகின்ற மசூட் அஸார் தலைமை தாங்கும் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜைஷ்-ஈ-மொஹமட் குழுவின் ஆயுததாரிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சண்டை இடம்பெற்ற பகுதியில் சில ஆயுததாரிகள் இருக்கலாம் என்ற புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கையொன்றை பாதுகாப்புப் படைகள் ஆரம்பித்திருந்த நிலையில், ஆயுததாரிகள் படைகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதைத் தொடர்ந்து துப்பாக்கி மோதலாக மாறியிருந்ததுடன் இன்று மாலை வரை நடவடிக்கை தொடர்ந்திருந்தது.
அந்தவகையில், புல்வாமாமிலுள்ள கிராமமொன்றில் நிலக்கண்ணி வெடியொன்றின் மூலம் இராணுவ வாகனமொன்று நேற்று இலக்கு வைக்கப்பட்டு, இரண்டு படைவீரர்கள் கொல்லப்பட்டு, 18 பேர் காயமடைந்த நிலையிலேயே மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
1 hours ago