Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 18 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரிய நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் பெண்களும், ஆண்களும் ஓரளவுக்கு சமவிகிதத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
கென்யா நாட்டின் தலைநகரமான நைரோபியில் இருந்து சுமார் 380 கிலோ மீட்டர் தொலைவில் உமோஜா எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெண்கள் மட்டுமே வாழ்கின்றனர் இங்கு ஆண்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ளனர்.
இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் அனைவரும் மாசாய் என்ற சமூகத்தின் ஒரு பகுதியாக கருதப்படும் சம்பூர் பழங்குடியினத்தை சேர்ந்தவர் ஆவர். இந்த கிராமம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி உள்ளது. இந்த கிராமம் உருவானதன் பின்னணியில் அதிர்ச்சியான தகவல் உள்ளது.
அதாவது, 1990-களில் பிரிட்டன் ராணுவ வீரர்கள் சம்பூர் இனத்தை சேர்ந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதன் காரணமாக அந்த பெண்களின் கணவன்மார்கள் அவர்களை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆவேசமடைந்த ரெபேக்கா லோலோ சோலி என்ற பெண் 15 பெண்களுடன் சேர்ந்து இந்த கிராமத்தை உருவாக்கியுள்ளார். மேலும் அந்த கிராமத்தில் பெண்களும் அவர்களின் குழந்தைகள் மாத்திரமே வாழ முடியும் ஆண்கள் நுழைவதற்கும் தடை விதித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது 40 குடும்பங்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பாரம்பரியமான மணி மாலைகளை விற்று வருமானம் ஈட்டுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
5 hours ago
7 hours ago
9 hours ago