Editorial / 2019 ஜூலை 01 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹைதராபாத்தில், பெண் வனத்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில், 16 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தின் அஸிபாபாத் மாவட்டத்தில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் வனத்துறை நிலத்தைக் கையகப்படுத்தி வைத்துள்ளனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நிலத்தை மீட்டு, அதில் மரகன்றுகளை நடுவதற்காக வனத்துறை அதிகாரிகள், குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.
இதன்போது, அவர்களை நிலப்பரப்புக்குள் அனுமதிக்காத ராஷ்டிரிய சமிதி கட்சியின் உறுப்பினர்கள், பேச்சுவாரத்தையில் ஈடுபட்டிருந்த வனத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக, 16 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த விடயம் குறித்து விளக்கமளித்துள்ள அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணா கூறுகையில், ஆதிவாசி, பழங்குடி விவசாயிகளின் நிலங்களை வனத்துறையினர் வலுக்கட்டாயமாக பறிக்க முயற்சித்தனர் என்றும் பயிரிட்ட நிலங்களை வனத்துறையினர் அழித்தனர் என்றும் இதனால் கோபத்தில் அவர்கள் வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்.
17 minute ago
29 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
29 minute ago
40 minute ago
1 hours ago