Freelancer / 2025 ஜனவரி 27 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நைஜீரியாவில், பெற்றோல் ஏற்றிச்சென்ற பௌசர் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்து சிதறியதில், 18 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியாவில் உள்ள இனுகு மாகாணத்தில், ஞாயிற்றுக்கிழமை (26) மாலை பெற்றோல் ஏற்றிக்கொண்டு பௌசர் சென்றுகொண்டிருந்தது.
இனுகு-ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பௌசர், முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது..
இந்த விபத்தில், பௌசரில் இருந்த பெற்றோல் தீப்பற்றி வெடித்துச் சிதறியதில், 18 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர், பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 minute ago
23 minute ago
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
23 minute ago
34 minute ago
2 hours ago