Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 21 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹக் தோ தெஹ்ரீக் இயக்கம் நடத்திய போராட்டம் இரண்டாவது மாதத்தை எட்டியதால் பலுசிஸ்தானின் குவாடர் மாவட்டம் தொடர்ந்து "கொதிப்பில்" உள்ளது என்று ஏசியன் லைட் தெரிவித்துள்ளது.
குவாடர் கிழக்கு விரிகுடா அதிவேக நெடுஞ்சாலை, குவாடர் துறைமுகத்துக்கு செல்லும் வீதி மற்றும் கட்டுமானத்தில் உள்ள குவாடர் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றில் போராட்டக்காரர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
டிசெம்பர் 24 அன்று பலுசிஸ்தான் அரசாங்கத்துக்கும் போராட்டத் தலைவர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் ஒரு முன்னேற்றத்தை அடையத் தவறியதை அடுத்து ஹக் தோ தெஹ்ரீக் இயக்கம் போராட்டத்தைத் தொடர்ந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற அரசாங்க அதிகாரிகளுக்கு அவர்களின் கோரிக்கைகளை செயல்படுத்த அதிகாரம் இல்லை என்று இயக்கத்தின் தலைவர் மௌலானா ஹிதாயத் உர் ரஹ்மான் பலோச் கூறினார் என, ஏசியன் லைட் அறிக்கையிட்டுள்ளது.
சீன பொறியாளர்கள் மற்றும் பிராந்தியத்தில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டங்களில் பணிபுரியும் உள்ளூர் தொழிலாளர்களின் நடமாட்டத்தை தடுக்கும் வீதி மறியல் உள்ளிட்ட பதட்டங்கள் குவாடரில் தொடர்கின்றன.
இப்பகுதியில் "சட்டவிரோத மீன்பிடி"க்கு முற்றுப்புள்ளி வைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை குவாடர் உரிமைகள் இயக்கம் (ஜிஆர்எம்) ஏற்காததைத் தொடர்ந்து துறைமுக நகரம் கடையடைப்பு வேலைநிறுத்தம் மற்றும் மோதல்களால் குவாடரில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
ஒர்மாரா நகரில் இருந்து ஆறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள பூச்சிய புள்ளி வரை பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், எல்லை வர்த்தகத்தை எளிதாக்கவும், குவாடருக்கு அருகிலுள்ள கடலில் ஆழ்கடல் மீன் இழுவைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் என்று தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.
குவாடரில் "மோசமான அரச அட்டூழியங்களுக்கு" மாகாண அரசாங்கமே பொறுப்பு என்று ஜிஆர்எம்ஒரு அறிக்கையில் கூறியது.
தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தியின்படி, ஏழை மக்களை ஒடுக்குவதற்காக குவாடாரில் மூன்று நாட்களாக இணையம் மற்றும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜிஆர்எம் ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பலுசிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபரா அஸீம் ஷா கூறுகையில், பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் குவாதரில் சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது.
"இதுவரை ஜிஆர்எம்மின் நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் மற்றும் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் பல குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் (மோதல்களில்) காயமடைந்துள்ளனர்," என்று குவாதர் உரிமைகள் இயக்க ஆர்வலர் ஒருவர் கூறியதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago