Ilango Bharathy / 2022 ஜனவரி 16 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்களின் ஆட்சி இடம்பெற்று வரும் நிலையில் , அந்நாட்டின் பொருளாதாரமானது பாரிய வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு ஊழியர்களுக்கு ஊதியமாக தானியத்தை வழங்கும் திட்டத்தை தலிபான்கள் விரிவுபடுத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் பல்லாயிரம் பொதுத்துறை ஊழியர்களுக்கு நன்கொடையாக பெறப்பட்ட கோதுமை ஊதியமாக வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் மக்கள் தொகையில் பாதிப் பேர் ஏதாவது ஒரு வகையில் உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர் என அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago