Freelancer / 2022 பெப்ரவரி 12 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல தசாப்தங்களாக திபெத்தியர்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற மற்றும் மிருகத்தனமான அட்டூழியங்களை சீனா செய்து வருவதாக திபெத்திய பௌத்த அறிஞரும் ஆசிரியருமான லிங் ரின்போச்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயங்களைத் தெரிவித்தார்.
திபெத்திய இலக்கியம், பௌத்த அடையாளங்கள் உட்பட தலாய் லாமாவின் அரண்மனை, ஏராளமான வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த மடங்கள் மற்றும் புத்தர் சிலைகளை அழித்ததற்காக சீனாவை அவர் சாடினார்.
5,000 மடங்களில் தற்போது ஐந்து மடங்கள் மட்டுமேஇருப்பதாகவும் ஏனையவை சீன இராணுவத்தால் இடிக்கப்பட்டுள்ளதாகவும் ரின்போச் குறிப்பிட்டார்.
நூறாயிரக்கணக்கான திபெத்திய விவசாயிகள் மற்றும் பிற பொதுமக்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் சிறைகள், வதை முகாம்களால் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் திபெத்தியர்களை தனது சொந்த நாட்டிலேயே பட்டினி நிலைக்குத் தள்ளியதற்காக சீனாவை ரின்போச் கண்டித்தார்.
திபெத்திய அடையாளம் மற்றும் கலாச்சாரம் இரண்டும் பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்டவை என்றும் திபெத்திய அடையாளத்தை அகற்றுவதற்காக பௌத்த மதத்தை சீனர்கள் தாக்குகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago