2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

மூக்கிற்குள் புகுந்து ரத்தத்தைக் குடித்த அட்டைப்பூச்சி

Editorial   / 2026 ஜனவரி 23 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியட்நாமிற்குச் சுற்றுலா சென்ற டேனிலா லிவேரானி என்ற 24 வயது இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பயணத்தின் போது அவரது மூக்கில் அடிக்கடி ரத்தம் வடிந்ததோடு, ஏதோ ஒன்று நாசிக்குள் நகர்வது போன்ற உணர்வும் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ரத்த உறைவு என்று நினைத்து அவர் அலட்சியமாக இருந்துள்ளார்.

ஆனால், ஒரு நாள் கண்ணாடியில் பார்க்கும்போது மூக்கிற்குள் ஏதோ ஒரு உயிரினம்இருப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு விரைந்தார்.

எடின்பர்க் மருத்துவமனையில் மருத்துவர்கள் அரை மணி நேரம் போராடி, டேனிலாவின் மூக்கிற்குள் இருந்த ஒரு பெரிய அட்டைப்பூச்சியை  உயிருடன் வெளியே எடுத்தனர்.

வியட்நாமில் அவர் குளிக்கும்போதோ அல்லது தண்ணீர் குடிக்கும்போதோ அந்த அட்டைப்பூச்சி மூக்கிற்குள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 அங்கேயே தங்கியிருந்து ரத்தத்தைக் குடித்து வந்த அந்த அட்டை, அவரது விரல் அளவுக்குத் தடிமனாக வளர்ந்திருந்தது. சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றதால் டேனிலா பெரிய பாதிப்பின்றி உயிர் தப்பினார்.

உடலில் இது போன்ற அசாதாரண மாற்றங்கள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X