Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 செப்டெம்பர் 14, சனிக்கிழமை
Freelancer / 2024 ஜூலை 10 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி மொஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ஓர்டர் ஒஃப் செயின்ட் எண்ட்ரூ தி அப்போஸ்தலர் (The Order of St. Andrew the Apostle) என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
ரஷ்யா - இந்தியா இடையேயான இரு தரப்பு உறவுகளில் பிரதமர் மோடி ஆற்றிய பணிகளுக்காக இந்த விருதை வழங்கினார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் தெரிவிக்கையில், “கிரெம்ளினில் உள்ள செயின்ட் எண்ட்ரூவில் நடந்த சிறப்பு விழாவில் ரஷ்யக் கூட்டமைப்பின் தலைவரான விளாடிமிர் புடின் இந்தியா - ரஷ்யா இடையேயான உறவை மேம்படுத்துவதில் பங்களித்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷ்யாவின் உயரிய தேசிய விருதை வழங்கினார்.
இந்த விருது 2019இல் அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த விருதை ஏற்கும் போது அதனை இந்திய மக்களுக்கும், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவுக்காக அர்ப்பணித்தார். இந்த விருது 300 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago
4 hours ago
5 hours ago