Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 02 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
மாநாட்டுக்கு பிறகு, ஒன்றாக புறப்பட்டு சென்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும், பிரதமர் மோடியும் காரிலேயே அமர்ந்து ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 20 இற்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். முதல் நாள் மாநாட்டின்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்தார்.
இந்நிலையில், மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். பின்னர், அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இந்திய, ரஷ்ய உச்சி மாநாடு வரும் டிசம்பரில் டில்லியில் நடைபெற உள்ளது. இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின் பங்கேற்க உள்ளார். அவரது வருகையை எதிர்பார்த்து 140 கோடி இந்தியர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். புடினை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்து விடுகிறது.
இந்தியா - ரஷ்யா இடையே மிக நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. இக்கட்டான காலங்களில்கூட இரு நாடுகளும் தோளோடுதோள் நின்று பயணம் செய்கின்றன. உலக நன்மை, அமைதி, வளத்துக்காக இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.
குறிப்பாக உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ரஷ்யாவும், உக்ரைனும் பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும். உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைத்து நிரந்தர அமைதி திரும்ப வேண்டும்.
ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. அனைத்து துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. குளோபல் சவுத் கூட்டமைப்பின் ஓர் அங்கமாக எஸ்.சி.ஓ. அமைப்பு செயல்படுகிறது.'' - என்றனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்.சி.ஓ) உச்சி மாநாட்டின் நிறைவாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இதில் காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ‘தாக்குதலுக்கு காரணமானவர்கள், ஆதரவு அளித்தவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எஸ்.சி.ஓ. கூட்டமைப்பு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் எஸ்.சி.ஓ. உறுப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு சீனாவின் குவிங்டாங் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை சீனா ஏற்கவில்லை.
இதனால், கூட்டறிக்கையில் கையெழுத்திட அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டார். ஒருமித்த கருத்து எட்டப்படாததால் கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை. இந்த சூழலில் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பஹல்காம் தாக்குதலுக்கு பகிரங்கமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
எஸ்.சி.ஓ. மாநாடு முடிவடைந்ததும், ஜனாதிபதி புடின் தனது சிறப்பு காரில் ஹோட்டலுக்கு புறப்பட்டார். அப்போது பிரதமர் மோடியையும் அவர் தனது காரில் அழைத்துச் சென்றார். இரு தலைவர்களும் ஹோட்டலுக்கு சென்ற பிறகும் காரில் இருந்து இறங்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் ஜனாதிபதி புடினும், பிரதமர் மோடியும் காரிலேயே தீவிர ஆலோசனை நடத்தினர். அமெரிக்க அரசின் வரி விதிப்பு, உக்ரைன் போர் குறித்து அவர்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. (a)
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago