2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2025 செப்டெம்பர் 02 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவு கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் நீதவான் அசங்க எஸ். போதரகமவினால் இன்று (02) பிறப்பிக்கப்பட்டது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

போதைப்பொருள் வர்த்தகர்கள், குற்றக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சேவைகளைப் பெற பொலிஸ் நிலையத்துக்கு வந்த பொதுமக்களிடமிருந்து ஒரு கோடியே 40 ரூபாவினை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பாக சதீஷ் கமகே   கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .