2026 ஜனவரி 28, புதன்கிழமை

மதுரோ வெளியேற்றம்: 32 கியூபப் பிரஜைகள் கொல்லப்பட்டனர்

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 05 , பி.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவை ஐக்கிய அமெரிக்காவில் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக ஐ. அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையில் தமது பிரஜைகள் 32 பேர் கொல்லப்பட்டதாக கியூப அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களுக்காக இன்றும் நாளையும் அஞ்சலி செலுத்தப்படுமென கியூபா மேலும் குறிப்பிட்டதுடன், உயிரிழந்தவர்கள் அனைவரும் கியூப ஆயுதப் படைகள் மற்றும் புலனாய்வு முகவரகங்களின் உறுப்பினர்கள் எனக் கூறியுள்ளது.

ஜனாதிபதி மதுரோ அதிகாரத்துக்கு வந்தது முதல் அவருக்கு குறிப்பிட்ட பாதுகாப்பை கியூபா வழங்கி வருகின்றது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X