Freelancer / 2024 மார்ச் 20 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒட்டாவாவில் வசிக்கும் இந்தியர் ஒருவர் தன் மனைவியை கொலை செய்துவிட்டு இந்தியாவில் வசிக்கும் தன் தாயிடம் வீடியோ கோலில் தகவல் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருவதாவது,
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்பிரீத் சிங்-பல்வீந்தர் கவுர் தம்பதிக்கு கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கனடாவில் படித்து வரும் தனது மகளுடன் பல்வீந்தர் கவுர் வசித்து வந்துள்ளார்.
அதே சமயம் ஜக்பிரீத் சிங் தொழில் இல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது மனைவி மற்றும் மகளை பார்க்க அவர் கனடா சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 15ஆம் திகதி ஜக்பிரீத் சிங், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள தனது தாயிடம் வீடியோ கோல் மூலம் பேசியுள்ளார். அப்போது அவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கனடா பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த பல்வீந்தர் கவுரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். S
இது குறித்து ஜக்பிரீத் சிங்கின் குடும்பத்தினர் கூறுகையில், அவர்கள் இருவரும் மகிழ்ச்சியான தம்பதியாக இருந்து வந்ததாகவும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
8 minute ago
20 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
27 minute ago