2025 மே 14, புதன்கிழமை

மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன

Freelancer   / 2023 ஒக்டோபர் 11 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது திடீரென நடத்திய தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள். இதை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர் தொடர்ந்திருக்கிறது.

தொடர்ச்சியாக போர் நடைபெற்று வருவதால் படுகாயமடைந்தவர்களால் காசா மருத்துவமனைகள் நிரம்பி காணப்படுகின்றன.

படுக்கைகள், மருந்துகள் இல்லாததால் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் தவித்து வருகின்றனர். 10 மணி நேரம் மட்டுமே மின் விநியோகம் நீடிக்கும் என்பதால் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காசாவில் லட்சக்கணக்கான மக்கள் குடிநீர், உணவு இன்றி ஏற்கெனவே தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .