Editorial / 2026 மே 01 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

மியான்மரில் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போரில், தற்போது ராணுவத்தின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. போர் ஆரம்பிக்கப்பட்ட தொடக்க காலத்தில் கிளர்ச்சியாளர்களிடம் பல முக்கிய இடங்களை இழந்த ராணுவம், தற்போது 'கட்டாய ராணுவச் சேர்க்கை' மூலம் இலட்சக்கணக்கான புதிய வீரர்களைத் திரட்டி, அதிரடித் தாக்குதல்களைத் தொடுக்கத் தயாராகி வருகிறது.
மறுபுறம், எதிர்ப்புப் படைகளிடையே நிலவும் ஒற்றுமையின்மை மற்றும் சீனாவின் அழுத்தம் காரணமாகக் கிளர்ச்சிக் குழுக்கள் தற்போது பலவீனமடைந்துள்ளன. மியான்மரில் உள்ள தனது பல கோடி ரூபாய் முதலீடுகளைப் பாதுகாக்கும் நோக்கில், சீனா அமைதிப் பேச்சுவார்த்தையை வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, மியான்மர் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள மின் ஆங் ஹலைங், ஆயுதக் குழுக்கள் எதிர்வரும் ஜூலை 31-ஆம் திகதிக்குள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தக் கொடூரமான போரில் இதுவரை சுமார் 8,000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். "போர் நின்றால் போதும்" என்ற ஏக்கத்தில் மக்கள் தவித்து வரும் நிலையில், ராணுவத்தின் இந்தத் திடீர் விஸ்வரூபம் வரும் நாட்களில் போரை மேலும் தீவிரமாக்கும் என அஞ்சப்படுகிறது.
4 minute ago
2 hours ago
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago
16 May 2026
16 May 2026